படிக்கின்றபோதே பறக்கின்ற பரவசம் தரக்கூடிய எழுத்து வித்தை ஒரு சிலருக்கே கைவரும் அதிசயம். அந்த அதிசயம் இயல்பாகக் கொண்டவர் மயக்க நடைக்காரர் ஆர்னிகா நாசர்.
'சொர்க்கத்தில் சந்திப்போம்' குறுநாவல்களின் தொகுப்பு.
சம்பவங்களின் வேகமும், சலிப்பு தட்டாத உரையாடலும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தந்துவிடுகிறது. இதுவே ஆர்னிகா நாசரின் எழுத்துக்கு உரிய தனித்தன்மையாக தெரிகிறது.
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.