இதில் இடம் பெற்றிருக்கிற கதைகள் மனதிற்குள்ளிருந்து நேரடியாக வந்திருப்பவை. தீரா நதியாய் சதா உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிற பரவச அதிநிஜங்கள். எனது கதைகளில் ஆண்பெண் நட்பும், அடர் காதலுமே பிரதானமாக இடம் பிடித்திருக்கும். அவை உண்மையின் நிர்வாணிப்போடு, மிக ஆழம் பயணிக்க யத்தனிப்பவை. நட்பையும், காதலையும் உன்னத தளத்தில் கொண்டாடும் ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் இந்த கதைகள் அனுமதி கேட்காமலே வந்து ஒட்டிக்கொள்ளும் என்பது உத்திரவாதம்.
காதலாய்,
தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now