சென்னையிலிருந்து டெல்லி வரையிலான ஒரு ரயில் பயணம். அந்த ரயிலில் பயணிக்கும் இரு காதல் உள்ளங்கள் ஸ்ரீராமனும், மைதிலியும்.
அவர்களின் உள்ளத்து உணர்வுகளை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டத்தோடு கலந்து சொல்லி இருக்கிறேன்.
இதில் பொன்னியின் செல்வன் புத்தகமும் கூட ஒரு சிறு கதாப்பாத்திரம். படித்து ரசித்து மகிழுங்கள் தோழமைகளே.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.
இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Rent Now