R. Manimala
முரளிதரன் - வேதா தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ்வில் நடந்த பெருந்துயரம் என்ன? அதன்பின் முரளிதரன், வேதாவின் தங்கை மலர்கொடியை திருமணம் செய்கிறார். வேதவின் நிலை என்ன? ஏன் மலர்கொடியை திருமணம் செய்கிறார், வாசிக்கலாம்... வாங்க.
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.