கட்டிடத் தொழிலாளியான இவர் தனது சுய முயற்சியில் 1969-ல் இருந்து திரை இசைத் தழுவல் பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வரும் இவர், நான்கு முறை சிறுகதைகளுக்காகவும், ஒரு முறை கவிதைகளுக்காகவும் மாநில அளவில் பரிசுகள் பெற்று இருக்கிறார்.
இவருடைய "தவம்" என்னும் சிறுகதைத் தொகுதி, 6 பதிப்புகள் வெளி வந்திருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில், இவரது "தவம்" சிறுகதை இளங்கலைக்கு பாடமாக இருக்கிறது. குங்குமம் மற்றும் ஆனந்த விகடனின் தடம் இதழில் இவரைப் பற்றி சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
நதிகள் இணைபை வலியுறுத்தி "பாரத நங்கைக்கு நதி வளையல் பூட்டிவோம்" என்பது இவரது தனிப் படைப்பு. இது தொடர்பான இவரின் நேர்காணல், சன் டிவியில் "சந்திப்போமா" நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகியுள்ளது. இவர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
Rent Now