Home / eBooks / The Apartment
The Apartment eBook Online

The Apartment (தி அபார்ட்மெண்ட்)

About The Apartment :

இது ஒரு எளிமையான காதல் கதை. பில்லி வைல்டர் திரைக்கதையை மையமாக கொண்டு எழுதப்பட்டிருக்கிற நாவல். இதில் வரும் இரு முக்கிய கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியான தேடலோடு பயணிப்பவர்கள் தான். ஆனால் வெவ்வேறு திசையில். அவன் பாக்ஸ்டர் என்கிற படி. அவள் ஃப்ரான் கூபர்லிக் என்கிற ஸ்கூபி.

அவன் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அட்ஜஸ்மெண்ட் என்கிற பெயரில் சகிப்புத்தன்மையின் உச்சம் கடந்தவன். அவன் அப்படி சூழ்நிலைகளால் ஆக்கப்பட்டு அதுவாகவே ஆகிப்போனவன். ஆனால் அவன் தனக்குத் தானே தனிமையில் தங்களின் சுயநலங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறவர்களை தன் புலம்பல்களின் மூலம் வெற்றிகொண்டு விட்டதாய் கற்பனையில் மனதை தேற்றிக்கொள்பவன்.

ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் “காம்டாமீட்டர்” நேரம்காலம் மறந்து தட்டிக்கொண்டிருக்கும் ஒரு எளிய ஜீவன். மற்றவர்கள் பாசையில் இளிச்சவாயன். அவள் அதே அலுவலகத்தில் லிஃப்ட் ஆபரேட்டர். இவளின் பிரச்னை என்னவென்றால் வயதுக்கு வராத காலத்திலிருந்தே யாரை பார்த்தாலும் காதல் வயப்பட்டுவிடுவாள். ஆனால் ஒவ்வொருவரோடும் பழகிப் பார்த்தபின் அவர்கள் யாரும் தன் காதலை காதலிக்கவில்லை. தன் பொலிவை மட்டுமே காதலித்திருக்கிறார்கள் என்பதை உணர நேரும். அவள் துடிதுடிப்பாள். இருந்தாலும் அவள் காதலின் தேடலை மட்டும் கைவிடுவதில்லை. அவள் வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் தேடல்கள் கசப்பாகவே இருந்தது. அவனும்அவளும் வெவ்வேறு தளங்களில் தங்களின் காதலை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்காகவே ஏங்கினார்கள். தவித்தார்கள். ஆனால் வேறுவேறு இடங்களில் தேடினார்கள்.

அவன் அவளை மனதிற்குள் நேசித்தான். அது அவளுக்கு புரிவதில்லை. அவனும் வாய்விட்டு எப்போதும் சொல்வதில்லை. அது தான் அவன். தயக்கம்..தயக்கம். சராசரி மத்தியதர வர்க்கத்தின் தாழ்வுமனப்பான்மையின் குறியீடாய் அவன். காலம்காலமான வாழ்வியல் போராட்டம் அவனை தொடர்ந்து வந்திருந்ததில் அந்த சகிப்புத்தன்மை இயல்பான விசயமாக அவனுள் ஆக்கப்பட்டுவிட்டிருந்தது.

சொல்லமுடியாததால் அவனுடைய காதலின் தேடல் நிறைவடையாமல் நீடித்தபடி இருந்தது. அவளுடைய காதலின் தேடல் நிறைவுப்புள்ளியை எட்டமுடியாமல் நீண்டுகொண்டேயிருந்தது.

இருவருமே காதலின் தேடலில் வெவ்வேறு கோணங்களில் களைப்புற்றும் சளையாமல் தேடிக்கொண்டேயிருந்தார்கள் என்கிற விசயம் ஒரு புள்ளியில் அவர்களால் உணரப்படுகிற நேரமும் வந்தது.

அந்த புள்ளியில் அவன் அவளாகிறாள். அவள் அவனாகிறான். அவர்கள் அவர்களாகிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஆஸ்கர் விருது தட்டிச்சென்ற திரைக்கதை இது. அதன் நாவல் வடிவம் இதோ உங்கள் பார்வைக்கு முன்.

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books