இப்படி ஒரு பதத்தை காதலை பற்றி சொல்கிற தருணங்களில் பிரயோகப்படுத்துவது உண்டு. ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையோடும், தனக்கேயான அடையாளங்களோடுமே உருக்கொள்கிறது. ஆனாலும், சில காதல் ரசாயணங்கள் இப்படியான உணர்வை, அதிசயமாய் ஏற்படுத்திச் சென்று விடுவதுண்டு. அதுவும் மேலோட்டமாக பார்க்கையில் அத்தனை வேறுபாடுகள் உள்ள இரண்டு மனிதர்களுக்கு இடையில். அப்படியென்றால், அது உண்மையில் தோற்றப் பிழையா??
பரஸ்பரம் தங்களின் குறைநிறைகளின் இயல்போடு ஏற்றுக் கொள்கிற பக்குவமும், அபிமானமும் அதில் இருக்கிறது. எதிர்பார்ப்பற்ற உலகத்தில் சஞ்சரிக்க தெரிந்திருக்கிறது. சித்தார்த், நிரஞ்சனா இருவரும் ஒருவரையொரவர் அப்படி நேசிக்கிறார்கள். ஆனாலும், சித்தார்த்திற்கு நிரஞ்சனாவை போல அந்த காதலை வெளிக்காட்டவே தெரியவில்லை. அந்த விசயத்தில் அவன் எல்.கே.ஜி. அது குறித்த அபிப்பிராயமே அற்றவனாக இருக்கிறான். அதற்காக அவன் பிரயத்தனப்படாமல் இல்லை. அவை அவனுக்கு கைகூடுவதாயில்லை. இறுதியில் அந்த புள்ளியை எப்படி கண்டடைகிறான். அந்த சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்குகிறான். அந்த பயணிப்பில் அவன் எப்படி காதலாகவே ஆகிப் போகிறான் என்பதே இந்த நாவலின் மையம்.
வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியும், அர்த்தமும் எதில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்லும் நிரஞ்சனா, சித்தார்த் கதாபாத்திரங்கள் என்றென்றும் நம்மிலும், நம்மோடும் வாழ்கிற வரை, இந்த பிரபஞ்சம் வற்றாத ஈரம் மிக்கதாகவே இருக்கும்.
வாழ்த்துகளுடன், தி. குலசேகர்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now