Home / eBooks / Theruvil Vizhuntha Maalaigal
Theruvil Vizhuntha Maalaigal eBook Online

Theruvil Vizhuntha Maalaigal (தெருவில் விழுந்த மாலைகள்)

About Theruvil Vizhuntha Maalaigal :

தன் கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் சௌந்தர்யா வீட்டின் மாடிக்கு திவ்யா தனது குழந்தை கோபியுடன் குடிபெயர்கிறாள். சௌந்தர்யாவும் திவ்யாவும் உடன்பிறவா சகோதரிகளாகிறார்கள். சௌந்தர்யா தன் கணவனுடன் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கும் நேரத்தில் திவ்யாவின் திடீர் உடல் நலமின்மையால் தனது கிட்னியை தனது கணவனுக்குத் தெரியாமல் கொடுத்து காப்பாற்றுகிறாள். வீட்டிற்கு வந்த திவ்யா தனது அண்ணன் பிரபாகரனுக்கு கடிதம் எழுதி வரவைக்கிறாள். பிரபாகரன் சௌந்தர்யாவைப் பார்த்ததும், தன் தங்கை திவ்யாவிற்காக தான் அவளுக்கு இழைத்த துரோகத்தை நினைத்து செய்வதறியாது திகைக்கிறான்.

சௌந்தர்யாவும் அவள் கணவனும் இணைவார்காளா? சௌந்தர்யாவிற்கு பிரபாகரன் இழைத்த துரோகம் என்ன? திவ்யாவின் வாழ்க்கையில் நடந்த மர்மம் என்ன? மேலும் பல திருப்பங்கள் நிறைந்த கதைகளுடன்.

About R. Sumathi :

ஆர். சுமதி என்ற எனது இயற்பெயரில் 1994 லிருந்து எழுதி வருகிறேன், என் கணவர், திரு. சௌரந்தராஜன், ஆசிரியராக பணியாற்றுகிறார். ஒரே மகள் சௌந்தர்யா பல் மருத்துவம் படித்து வருகிறார். என் சொந்த ஊர் திரு ஞானசம்பந்தர் அவதரித்த, திரு. சீர்காழி கோவிந்த ராஜனால் புகழ் பெற்ற சீர்காழி. தமிழல் எம். ஏ பட்டம், வரலாற்றின் எம். ஏ பட்டமும் பெற்றுள்ள நான் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

தற்சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆவார்பூர் என்னும் இடத்தில் வசித்து வருகிறேன். பலமொழி பேசும் மக்கள் மத்தியில் வாழ்வதால் இந்தியர் என்ற உணர்வை எப்பொழுதும் உணர்ந்து மகிழ்கிறேன்.

என்னுடைய முதல் நாவல் தேவியின் 'கண்மணி' வெளி வந்தது. கண்மணி நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது ஆரம்பகாலத்தில் என் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளர்த்தது.

என்னுடைய தமிழாசிரியர் என்னுடைய நாவலில் ஆராய்ச்சி படிப்பு முடித்தது எனக்க பெருமையை அளித்தது. மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவர் இருவர் என் நாவலை ஆராய்ச்சி படிப்புக்கு எடுத்துக் கொண்டு எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.

புஸ்தகா நிறுவனத்திலிருந்து என்னுடைய நூல்கள் வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி, எழுத்தும் ஓவிய ஆசிரியர் பணியும் தரும் திருப்தியுடன்,

உங்கள்

ஆர். சுமதி

Rent Now
Write A Review