Thirumalai Thiruvanthathi (திருமலைத் திருவந்தாதி)
About Thirumalai Thiruvanthathi :
திருமலையில் கலியுகத் தெய்வமாய் அனைவருக்கும் அருள்பாலித்து வரும் திருவேங்கடமுடையானைப் பற்றி நூறு திருவந்தாதியாக இறையருட்கவி இளநகர் காஞ்சிநாதன் அற்புத முறையில் இயற்றியுள்ளார். இவ்வந்தாதி கற்பார்க்குக் கற்கணாய் இனிக்கும். தெவிட்டாத இன்பம் ஊட்டுவதாய் அமையும். இந்த நூலைத் தமிழுலகமும் வைணவ சமய உலகமும் மனமுவந்து ஏற்கும்.
'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்'
என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க திருமலை வேங்கடவனின் அருமைதனை நூறு திருவந்தாதியாக இளநகர் காஞ்சிநாதன் இயற்றியிருப்பது இதற்குச் சான்று. இந்நூலைக் கற்போர்க்கு நாற்பயனும் கிட்டும் என்பதில் ஐயமில்லை
About Elanagar Kanchinathan :
இளநகர் முடும்பை சௌந்திர ராஜ அய்யங்காருக்கும் - பையூர் கௌசல்யா அம்மையாருகும் 22 செப்டம்பர் 1952- ஆம் ஆண்டு தடப்பத்திரி என்னும் ஊரில் அனந்தபூர்
மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் மகனாகப் பிறந்தவர்
இ.எஸ்.ஸ்ரீநிவாசவரதன். இவரது புனைப்பெயர் இளநகர்
காஞ்சிநாதன் என்பதாகும்.1969-இல் இருந்து கவிதை,
கட்டுரை, அந்தாதி, ஆலயக் கட்டுரைகள், தொகுப்பு
நூல்கள் இவற்றை “இளநகர் காஞ்சிநாதன்” என்ற பெயரில் எழுதி வருகிறார்.
ஸம்ஸ்கிருத்தில் இருக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து, இராக மாலிகா வடிவில் இசையமைக்க ஏதுவாக, 174 பாடல்கள் எழுதிய பெருமை இவரைச் சேரும். சுமார் 18 புத்தகங்கள் அச்சாகி வெளி வந்துவிட்டன.
Rent Now