Thirumalin Peyargal 1000 (திருமாலின் பெயர்கள் 1000)
About Thirumalin Peyargal 1000 :
நமது பாரதத்தின் பெருமையை பேற்றும் மஹாபாரதம் வேதங்களில் ஐந்தாவதாகப் போற்றப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மஹாபாரதத்தில் 149ஆவது அத்யாயமாக இடம் பெற்றுள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்த போது பகவான் கண்ணன் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் அடங்கியதாகும்.
ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால் அதன் அர்த்தங்களை முழுமையாக அறிய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் தொகுத்த ஸ்ரீமான் இளநகர் காஞ்சிநாதன் கவிதை நடை பாராட்டுதற்குரியது. மேலும் இதற்கு HMV ரகு மாமா அவர்கள் இசையமைத்து, ராகமாலிகா வடிவில் 172 பாடல்களை பக்தி ரசம் ததும்பும் குரலில் பாடி, அசத்தி இருக்கும் பாடகர்கள், பாடகியான திருமதி. பத்மஜா பத்மநாபன் ஆகிய அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணன் அருள் கிடைத்தது என்பதே உண்மை.
இதைப் படித்து, கேட்டு, பார்த்த வகையில் என்னுடைய பங்கு சிறியதாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் பகவான் எனக்குக் கொடுத்த பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்த அரிய முயற்சிக்கு துணை நின்று, அனைவரும் புத்தகத்தை வாங்கிப் படித்து பாடல்களைக் கேட்டு விஷ்ணுவின் அருளைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
About Elanagar Kanchinathan :
இளநகர் முடும்பை சௌந்திர ராஜ அய்யங்காருக்கும் - பையூர் கௌசல்யா அம்மையாருகும் 22 செப்டம்பர் 1952- ஆம் ஆண்டு தடப்பத்திரி என்னும் ஊரில் அனந்தபூர்
மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் மகனாகப் பிறந்தவர்
இ.எஸ்.ஸ்ரீநிவாசவரதன். இவரது புனைப்பெயர் இளநகர்
காஞ்சிநாதன் என்பதாகும்.1969-இல் இருந்து கவிதை,
கட்டுரை, அந்தாதி, ஆலயக் கட்டுரைகள், தொகுப்பு
நூல்கள் இவற்றை “இளநகர் காஞ்சிநாதன்” என்ற பெயரில் எழுதி வருகிறார்.
ஸம்ஸ்கிருத்தில் இருக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து, இராக மாலிகா வடிவில் இசையமைக்க ஏதுவாக, 174 பாடல்கள் எழுதிய பெருமை இவரைச் சேரும். சுமார் 18 புத்தகங்கள் அச்சாகி வெளி வந்துவிட்டன.
Rent Now