வாசகர்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி - 2 எழுதி இதோ உங்களின் வாசிப்புக்கு சமர்ப்பிக்கிறேன். இத்தொகுப்பில் மொத்தம் 39 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இதை எழுத நான் பட்ட சிரமங்கள் அதிகம். சிறுகதைகளை படித்து விட்டு நீங்கள்தான் சொல்லவேண்டும்.
இஸ்லாமிய சகோதரத்துவக்குரல் ஆசிரியர், எம். ஏ. ஷாஹுல் ஹமீது ஜலாலி அவர்களுக்கு இத்தொகுப்பினை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
இறைவனின் நாட்டமிருந்தால் தொகுதிகள் தொடரும்.
- பி.ச. ஆர்னிகா நாசர்
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.