எல்லாப் புகழும் இறைவனுக்கே!
உங்களின் கரங்களில் தவழும் 'திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி 5' - ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக்கிடைக்கும்.
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 4 தொகுதிகளையும் அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை 3 தொகுதிகளையும் வாசித்து அயர்ந்திருக்கிறேன்.
- ஆர்னிகா நாசர்
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.