Home / eBooks / Thiruvarur Tyagesan Thirukovil
Thiruvarur Tyagesan Thirukovil eBook Online

Thiruvarur Tyagesan Thirukovil (திருவாரூர் தியாகேசன் திருக்கோயில்)

About Thiruvarur Tyagesan Thirukovil :

தேராரும் நெடு வீதித் திருவாரூர்" என்று சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து பாடிய ஆரூர் என விருப்பமாக வழங்கப்படும் திருவாரூர் கொண்ட பெருமைகள் அளப்பரியது என்பதை புராணங்கள், தல வரலாறு விரித்துக் கூட எவரையும் வியப்பு பற்றிவிடும். திருவாரூர் திருக்கோயிலுக்கு தனிக் கருவூலம் இருந்ததையும் அவை அரசர்கள் மற்றும் பொது மக்கள் அளிக்கும் நன்கொடைபடி தனித்தனியே தேவர் பண்டாரம்,, ஆதி சண்டேசுவர தேவர் பண்டாரம், தியாக வினோதன் பண்டாரம், என்று தனித்தனி அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் வரவு செலவு கணிக்கப்பட்ட செய்திகளையும் இவ்வூர் ஆலய கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது...

திருவாரூர் என்றாலே அதன் தேர் மக்களுக்கு நினைவுக்கு வரும். "திருவாரூர் தேரழகு" என்பது பழமொழி. வீதி விடங்கன் என்ற சிறப்பு பெயர் கொண்ட தியாகேசன், தெரு வீதிகளில் ஆரோகரித்து வர வேண்டும் என விரும்பிய , கிபி 1118-1136 வரை ஆட்சி செய்த மன்னன் விக்கிரம சோழன், அகல விதிகளில் எழிலாக பவனி வர ஆழித் தேர் என்ற பெரிய தேரை (எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில்) உருவாக்கித் தந்தான்.. இத்தேர் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பிரம்மாண்டமாகவே உள்ளது என போற்றப்படும்.

About Aroor R. Subramanian :

திரு. ஆர்.சுப்பிரமணியன், திருவாரூர் - விஜயபுரத்தில் 18.12.1940 அன்று பிறந்தார். இவரது தந்தை திரு. உமா மகேஸ்வரன் என்ற ஏ. இராமய்யர். பூர்வீகமாகத் திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தமாக திருவாரூரில் குடியேறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 4 ஆம் தொகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவகலகத்தில் இளநிலை உதவியாளராக (அப்போது லோயர் டிவிஷன் கிளார்க்) 1.6.1960 அன்று தனது 19 வயதே முடிந்த நிலையில் பணியில் சேர்ந்தார்.

அவர் சேர்ந்த துறை வருவாய்த்துறை. அத்துறையில் பல பயிற்சிகளும், பலதுறைத் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகளும் உண்டு. அவைகளை எல்லாம் குறுகிய காலத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார். அத்துறையில் வருவாய் ஆய்வாளர், உதவியாளர். தலைமை எழுத்தர், தலைமைக் கணக்கர், துணை வட்டாட்சியர், சிறப்பு நீதிபதி, வட்டாட்சியர், காஞ்சிபுரம் வரவேற்பு வட்டாட்சியர், (மீனம்பாக்கம் விமான நிலையம் உட்பட ) நிலமேலாளர், சிறப்புத் துணை ஆட்சியர், என்று துறையிலுள்ள எல்லா நிலைகளிலும் பணியாற்றி சென்னை, கலால் உதவி ஆணையராகப் பணியாற்றும் போது 31.5.1999 அன்று பணி நிறைவு ஓய்வு பெற்றார்.

Rent Now
Write A Review

Same Author Books