1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.
Rent Now Sita
Nice
கோபு
இந்த மின்னூல் பற்றிய எனது மதிப்புரையை என் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளேன். அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2017/05/blog-post.html நூலாசிரியர் அன்பின் ஜெயஸ்ரீ க்கு என் அன்பு நல்வாழ்த்துகள்.
இராய செல்லப்பா
சுவாரஸ்யமான கதை. பொதுவாக ஆண் எழுத்தாளர்கள் கையாளும் கருப்பொருளை ஒரு பெண் எழுத்தாளர் கையாண்டிருக்கிறார். இந்த நாவலை எழுதிய அனுபவம் எதிர்காலத்தில் இவருக்கு மேலும் நீண்ட நாவல்கள் எழுதக் கைகொடுக்கும்..
கோபு
ஒரே மூச்சில் தொடர்ச்சியாகப் படிக்க வைத்த கதை. கடைசிவரை திக் திக் என்று என் மனம் அடித்துக்கொண்டது. எப்படியோ அந்த மலர்விழி என்ற அழகிய மலர் யாராலும் கசக்கி நுகர்ந்து விட்டெறியப்படாமலும், சகதி சாக்கடைகளில் விழுந்து விடாமலும் விழித்துக்கொண்டு தப்பி வந்ததில் நிம்மதியானது. நல்ல சஸ்பென்ஸ் கொடுத்து கதையைத் த்ரில்லிங்காக நகர்த்தியுள்ள விதம் ஜோர் ஜோர்.