மனித வாழ்வில் தியாகம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் நிறமிழந்து வரும் காலமிது. எனது குடும்பத்தினருக்காக உறவினருக்காக நண்பர்களுக்காக தியாகம் செய்தேன் என்று சொல்லும் தலைமுறையை... இன்றைய தலைமுறை வினோதமாக தான் பார்க்கிறது.
தியாக உணர்வுடன் இருப்பவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அண்ணன் தங்கை பாசத்தை மையக் கருவாகக் கொண்டு காதல் கொண்ட உள்ளங்களை சேர்த்து வைக்க அவர்கள் எடுக்கும் முயற்சி... தங்கையின் தியாக உணர்வு இவற்றை மையப்படுத்தி உருவானது தான் ‘தியாகத்தின் மறுபக்கம்’ என்ற நாவல்...
வாசகர்களின் உள்ளத்தில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now