உச்சம் தொடு என்ற தன்னம்பிக்கை தரும் நூல். இது மனித வளத்தில் ஏற்படுகிற அபரீதமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்ற சிறப்பாகும். மனித வாழ்க்கை உணர்வுகளை சார்ந்தது. அது பல கனவுகளையும், கற்பனை நயங்களையும் உள்ளார்ந்த விசயமாக கருதப்பட்டு உயரிய நோக்கத்தை அடையக் கூடிய சூழ்நிலைகளையும் பின் பக்குவங்களையும் உருவாக்கிக் கொள்கிற வாய்ப்புக்கள் மனித வளத்திற்கு உண்டு. ஒவ்வொரு தனி மனித சமூதாயத்திற்கு தன்னிச்சையான முடிவு எடுக்கக்கூடிய சௌபாக்கியம் கிடைப்பது என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தும் அதனை சார்ந்து செயல்படுகின்ற செயல்பாட்டுக்களை பொறுத்தும் அமையும். ஆகவே நோக்கம் வைத்து உயரிய இலக்கை அடைய வெற்றி தேவையாகிறது என்பதனை வலியுறுத்தவே வெற்றிக்கான உச்சம் உன்னிடத்தில் உள்ளது. வேறு யாரிடத்திலும் இல்லை என்பதனை நிலை நிறுத்தி காட்டிடவே இந்நூல் படைக்கப்பட்டது என்பதனை உங்களின் பேராதரவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Rent Now