Home / eBooks / Ulagai Uraiyavaitha Inapadukolaigal
Ulagai Uraiyavaitha Inapadukolaigal eBook Online

Ulagai Uraiyavaitha Inapadukolaigal (உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்)

About Ulagai Uraiyavaitha Inapadukolaigal :

இந்த புத்தகத்திற்கு நுழையும் முன்பு ஒன்று தெளிவுப்படுத்தி விடுகிறேன். இதில் குறிப்பிட்டு இருக்கும் இனப்படுகொலைகள் தான் உலகில் நடந்திருக்கிறது என்பது இல்லை. அள்ள அள்ள அமுதசுரபிப் போல... எழுத எழுத இனப்படுகொலை, இன ஒழிப்புக்காக தகவல்கள், செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதில், எதைப்பற்றி எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை.

எல்லாம் மனித உயிர்கள் தான். இறந்தவர்கள் யாரும் சொந்தமில்லை. பழகியவர்கள் இல்லை. தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை. ஆனால், ஏன் கொத்து கொத்துக்காக மனித உயிர்களை கொள்ள வேண்டும்? அப்படி கொலை செய்து எத்தனை பிரச்சனைக்கு தீர்வு வந்துள்ளது? என்று கேள்வி கேட்டால் பதில் ‘இல்லை’ என்று தான் வரும்.

மனிதன் நாகரிகம் வளர்ந்தது முதல் கொலை, கொள்ளை எப்படி வளர்ந்ததோ.... அரசியல் காரணங்களுக்காக இனப்படுகொலைகள் வளர்ந்தது. உலகம் தோன்றிய முதல் யாரும் ஒரு இடத்திலே பிறந்து, வாழ்ந்து இறக்கவில்லை. இன்று நாம் காணும் வளர்ச்சி மனிதனின் தேடல் தான். அதேப் போல், மனிதனின் தேடலுக்கு ‘பயணம்’ ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மனிதனின் பயணத்தில் தான் அவனின் ‘அறியாமை’ எனும் இருள் விளகியது. மற்ற இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் உள்வாங்கிக் கொண்டார்கள். தன்னிடம் இருக்கும் கருத்துக்களை சென்ற இடத்தில் பரப்பினார்கள். மொழியே தெரியாமல் இருந்தாலும், மற்றவர்களின் கருத்துக்கள், செயல் முறைகள் புரிந்துக் கொண்டு நமக்கு தேவையானதை அவரவர்கள் எடுத்துக் கொண்டார்கள். தேவை அல்லாதவையை விட்டு விட்டார்கள்.

தேவையில்லாமல் இருக்கும் பொருள் தேவையான இடத்தில் கொடுக்கப்பட்டது. தேவையிருப்பவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மனிதனின் வியாபாரமும் பெருகியது. பண்மாற்று முறையில் வளர்ந்த வியாபாரங்கள், பின்னாளில் பணத்தின் மூலம் நடைப்பெற்றது.

கல்வி, வியாபாரம், பொருள் போன்ற மனிதனின் ஆசைக்கு அவன் செல்லும் பயணங்கள் உதவியது. இதனால், அவனின் தேடல் பயணத்தில் அவன் மற்ற இடங்களில் குடி புக வேண்டிய நிலைமை. அவன் குடும்பமும் அவனுடனே சில சமயம் பயணிக்க வேண்டியது இருக்கும் அல்லது சென்ற இடத்தில் ஒரு குடும்பம் உருவாக்கி அங்கையே வாழ்ந்து மடிந்திருப்பான்.

அவனின் சங்கததியர்கள் அங்கே வாழ்ந்துக் கொண்டு இருப்பார்கள். பல நூறு ஆண்டுகள் வளர்ந்த பிறகு, இவர்களின் வளர்ச்சி அங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தவர்கள் கண்ணை உருத்தும். அதுவும், அவர்களின் வளர்ச்சி வாழ்ந்தவர்களின் முதுகு மேல் இருந்தால் தங்கள் உரிமைகளைப் பற்றி யோசிக்க தோன்றும். 'வந்தேரிகள்' என்று சொல்லி வளர்ந்தவர்களின் பொருளை வாழ்ந்தவர்கள் அடித்து பிடுங்க செய்வார்கள்.

இதில், பயணித்து வந்தவர்கள் மீது தவறா? வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்கள் வந்தவர்களிடம் தங்கள் இடத்தை இழந்தது தவறா? என்றால் இரண்டு தவறில்லை என்று சொல்ல தோன்றும். விமர்சனம் செய்வோம்.

யார் கை ஓங்கி இருக்கிறதோ, அவர்கள் தாக்குதல் பலமாக இருக்கும். பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்களை அடக்கி ஒடுக்கி விரட்ட நினைப்பார்கள்.

யார் எங்கு இருந்து வந்தார்கள். யார் நிலத்தின் உரிமையாளர்கள். யார் உயர்ந்தவர்கள். யார் தாழ்ந்தவர்கள். யாருடைய சொத்தில் அவன் வாழ்கிறான். போன்ற எல்லா கேள்விகளுக்கும் பதிவுகள் இல்லை. சரியான பதிலும் இல்லை. அதனால், அவரவர் எண்ணத்திற்கு கருத்துக்கள் கூறி, சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். அதையே காரணம் காட்டி வன்முறைகள் நடக்கிறது.

இந்தப் புத்தகத்தில் எந்த இனப்படுகொலைக்கும் யார் மீது தவறோ அல்லது வக்காளத்தோ வாங்கவில்லை. விவாதிக்கப்படாமல், கவனம் செலுத்தாமல்.... ஏன் பலருக்கு தெரியாமல் எத்தனையோ இன ஒழிப்பு சம்பவங்கள் உலகில் நடந்திருக்கிறது. அதை முடிந்தளவு எந்த சார்பில்லாமல் சொல்லியிருக்கிறேன். இதில் இரத்தவாடை, பிணக்குவியல், மிருகத்தனம் அதிகமாக இருக்கும். கருப்பு நிறத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தாலும்... இந்த நூலுக்கு உயிர் கொடுத்தது இறந்தவர்களின் துளிகள்… இரத்தத்துளிகள்!!!

அன்புடன்
குகன்

About Guhan :

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rent Now
Write A Review