R. Manimala
சித்தார்த் யாழினி இருவரும் ஆன்லைன் மூலம் பழகுகிறார்கள்.
இதில் யாழினி பத்திரிக்கை தொகுப்பாளினியாக பணிபுரிகிறாள்.
சித்தார்த் தன் தந்தையின் மறைவிற்க்கு பிறகு அவரது பதவியை அரை மணதுடன் ஏற்றுக்கொண்டு திறம்பட பணியாற்றுகிறான். இதற்க்கிடையில் யாழினிக்கு சித்தார்த்தின் மீது காதல் ஏற்படுகிறது.
தன் காதலை ஆன்லைன் சாட் மூலம் சித்தார்திற்கு தெரியபடுத்துகிறாள்.
சித்தார்த்தும் தன் காதலை நேரில் சந்தித்து கூறுவதாக பொது இடம் ஒன்றை கூறி வர சொல்கிறான். மிகுந்த மகிழ்ச்சியில் யாழினி காத்துக்கொண்டிருக்க அவளது எதிர் பார்ப்பு சிதரி போனது.
ஏன்?. யார் அந்த சித்தார்த்? யாழினியின் நிலை என்ன ஆனது? பார்போம்...
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.