R. Manimala
முகேஷ் ஒரு சிறந்த டைரக்டர் ஆக வேண்டும் என்று சென்னை வருகிறான். வரும் வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். இவர்கள் இருவரும் சென்னையில் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொள்ள இவர்களுக்கிடையில் நட்பு முளைத்தது. நாளைடைவில், இந்த நட்பு காதலாக மாறி இருவரும் கணவன், மனைவி ஆனார்கள்.
மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களது வாழ்வில் ஒரு புயல் காற்றாய் வந்தாள் நிருபமா. யார் இந்த நிருபமா? இவர்களுக்குள் புகுந்து என்ன செய்தாள். பார்போம்....
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.