அன்புடையீர்! அனைவருக்கும் வணக்கம்.
இந்நூல் வெளியிட ஆக்கமும் மன ஊக்கமும் தந்த வாசகப் பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நான் எழுதிய “வானம் வெகு தூரமில்லை”, “வெற்றியின் ஆயுதம்”, “ஆரோக்கிய மற்றும் சுகாதாரப் பாடல்கள்” என்ற மூன்று புத்தகங்கள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை அளித்ததில் மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு, இந்நூல் ஒரு மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணம், சிந்தனை, அறிவு, ஆற்றல், வல்லமை, தன்னம்பிக்கை இவற்றை வெளிக்கொணர்ந்து சர்வவல்லமை பெற்று சரித்திரம் படைக்க, சோதனைகளை சாதனைகளாக்க, தோல்விகளை வெற்றிகளாக்க உதவும் என்ற நோக்கோடு எழுதப்பட்ட ஒன்றாகும்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய மஞ்சை. சோமு அவர்களுக்கும் மற்றும் அவ்வப்போது ஊக்கமும் பாராட்டும் தந்து என்னை உருவாக்கிய பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் ஆகிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குவதில் பெருமையோடு அகமகிழ்கிறேன்.
என்றும் உங்கள் ஆதரவு கரத்தோடு,
இரா.சி.ப. நடராசன்
மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Rent Now