அன்புடையீர், அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.
"உங்களுக்குள்ளே ஓர் அற்புத மனிதர்" என்ற தலைமைத்துவ திறனாய்வினை எடுத்துரைக்கும் நூலாகும். நமது வாழ்வில் உன்னத பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு முன்வரைவு திட்டமும், அதற்கான நடைமுறைப் படுத்தும் செயல்பாடுகளும் இருந்துவிட்டால் மட்டும் போதாது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பற்பல சிக்கல்களும் தடைகளும் நிகழவே செய்கின்றன. ஆகவே அவற்றிலிருந்து மீளத் தகுந்த ஆலோசனை பெற தூண்டுதலையும் உந்துதலையும் பெற்றுக் கொள்ள எண்ணங்களுக்கு வலிமை தேவைப்படுகிறது என்பதனை ஆழ்மனதில் உணர்ந்தால் நமக்குள்ளே ஆள்மைத் தன்மை பிறக்கப்படுகின்றன. அதனை வழிநடத்திச் செல்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உள்ளது என்பதனை உணர்த்தவே!
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு. சி.முத்துகுரு, எம்.ஏ., பி.எட்., அவர்களுக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய எனது அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைப் பெருமையோடு உரித்தாக்குகிறேன்.
அன்புடன் மு.ப.நடராசன்.
மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Rent Now