நாயகன் : அனிருத்தன்.
நாயகி : மித்ரா.
தன் தோழி, தாமரையின் திருமணத்திற்கு செல்லும் மித்ரா திடீர் மணமகளாக... அவளை திருமணம் செய்து கொள்ளும் அனிருத்தன்.
எதற்குமே ஆசைப்படாத அனாதை இல்லத்தில் வளர்ந்த மித்ரா, அவனை விட்டு விலகிச் செல்லவும் சுலபமாக முடிவெடுக்க, அதற்கு அவன் சம்மதித்தானா?
தான் வளர்ந்த சூழலை விட்டு, திடுமென ஒரு குடும்பத்துக்குள் அடியெடுத்து வைக்கும் மித்ரா எதிர்கொள்ளும் நிகழ்வுகள், சங்கடங்கள், புது இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் விதம்... புகுந்த வீட்டினர் அவளை ஏற்கும் விதம் என சூழல்களை அவர்கள் கையாளும் விதமே அலாதியாக இருக்கும்.
அனாதையாக வளர்ந்த அவள், அவளது பெற்றவளை கண்டு கொள்ளும் இடம், அக்கா நிஷாவின் வாழ்க்கைக்கு அவள் உதவும் விதம்...
அனைத்தையும் எவ்வாறு சமன்செய்து வாழ்க்கையை காத்துக் கொண்டாள் என தெரிய தொடர்ந்து படியுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
PAVITHRA
PLS FULL NOVELS LIKE NEEDED
PAVITHRA
PLS FULL NOVELS LIKE NEEDED
Vinitha
Intha novel open agala
Emmanuel
Nice