அன்புடையீர் வணக்கம்!
‘உயர்ந்த சிந்தனைகளே வல்லமை' என்ற மனிதநேய மாண்புகளை எடுத்துரைக்கும் மகத்தான அறிவுப் பொக்கிஷங்களை சர்வ சக்தியோடு வல்லமை படுத்தும் விதமாக உயர்ந்த சிந்தனைகள், உயர்ந்த எண்ணங்கள் என்றுமே சிறப்பானதொரு வாழ்வைத் தரும் என்ற சீரிய நோக்கோடும், சீரிய முயற்சியோடும் எழுதப்பட்டதே இந்நூலாகும்.
மனிதன் வாழ்வை தொடங்கிய காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை மகத்தான சீரிய பணிகளைச் செய்து வெற்றி வாய்ப்புகளைக் குவிப்பதற்கு படுகின்ற சோதனைகளும் தடைகளும் அளப்பரியது. ஆகவே இந்த வெற்றி வாய்ப்புகளை எளிதில் சாதனைகளாக சரித்திரம் படைக்க சில வழிமுறைகளும் கருத்துக்களும் தகவல்களாகப் படித்து உணரும்போது மனதிலே தெளிவும் தன்னம்பிக்கையும் உருவாகும் என்ற விதத்தில் இந்த சிறுசிறு தலைப்புகள் மூலம் எளிதில் புரியும்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய நல்லாசிரியர், முத்தமிழ் முரசு சி.முத்துகுரு எம்.ஏ.,பி.எட்., அவர்களுக்கும், பதிப்புரை வழங்கி புத்தகத்தை சீரிய முறையில் வெளியிட்ட திரு. நேரு அவர்களுக்கும், மற்றும் அவ்வப்போது ஊக்கமும் பாராட்டும் தந்து என்னை உருவாக்கிய பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் ஆகிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கை யாக்குவதில் பெருமையோடு அகமகிழ்கிறேன்.
என்றும் உங்கள் ஆதரவு கரத்தோடு,
- இரா.சி.ப. நடராசன்.
மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Rent Now