Uyiraal Inainthirupean

Mukil Dinakaran

0

0
eBook
Paperback
Downloads32 Downloads
TamilTamil
NovelNovel
Love and RomanceLove and Romance
Page163 pages

About Uyiraal Inainthirupean

அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கைகள். ராதா, எப்போதும்…எல்லா விஷயத்திலும், அக்கா அம்பிகாவுடன் போட்டி போட்டுக் கொண்டேயிருப்பாள்.

மூத்தவள் அம்பிகாவிற்கு தந்தை வாங்கி வந்த கொலுசை தனக்கே வேண்டுமென அடம் பிடிக்கிறாள். அம்பிகா விட்டுக் கொடுக்க வாங்கிக் கொள்கிறாள்.

அதே போல்தான் ஊதா கலர் சுடிதாருக்கும் அக்காவுடன் சண்டை போட்டு வாங்குகிறாள்.

உச்சகட்டமாய், அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளைதான் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து அக்காவிற்கு முன்பாகவே திருமணமும் செய்து கொள்கிறாள். ஆனால், பிரசவத்தில் பெண் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இறந்து போகிறாள்.

இறந்து போன ராதாவின் மாமனாரும், மாமியாரும் அம்பிகாவைத் தங்களது மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்….

மீதி…நாவலுக்குள்….

About Mukil Dinakaran:

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

More books by Mukil Dinakaran

View All
Antha Violet Kangal
Mukil Dinakaran
Innarkku Innarendru!
Mukil Dinakaran
Kanavaana Kanavugal
Mukil Dinakaran
Aasaiye Alai Polea...!
Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!!
Mukil Dinakaran

Books Similar to Uyiraal Inainthirupean

View All
Vaasal Vantha Vanaville
Latha Baiju
Irandam Kaadhal Yutham
Pattukottai Prabakar
Uravu Solla Oruthi
Irenipuram Paul Rasaiya
Enna Thavam Seithanai
Vidya Subramaniam
Thaabamadi Nee Enakku
Yamuna