இந்த கதைக்கு இந்தக் கவிதையையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றிருக்கும் ஒரு வரி கவிதைகளையும் எழுதிய தோழி மது ஹனிக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
கார்மேகத்தின் மழையானவன்! காற்றின் திசையானவன்!
விமானத்தின் வித்தகனானவன்! வேகத்தின் விசையானவன்
தந்தையின் கர்வமானவன்! தந்தையே சர்வமானவன்!
அவன் தான்! கேப்டன் விவேக் ஸ்ரீனிவாசன்!!!
மகனின் சரிபாதி அவளே - தந்தையின் தேர்வும்
மனங்கவர்ந்த சகி இவளே - தனயனின் உணர்வும்
மாறுபட்ட பாதைகளில் பயணிக்குமோ??
வண்ணங்கள் வானவில்லாக சங்கமிக்கும்
வான”மது” விவேக் ஸ்ரீனிவாசன் வாழ்வில் சா(ச)த்தியமாகுமோ!!
நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.
இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Rent Now Revathy M
Fantastic