Home / eBooks / Vaanmagano! Vaseegarano!
Vaanmagano! Vaseegarano! eBook Online

Vaanmagano! Vaseegarano! (வான்மகனோ! வசீகரனோ!)

About Vaanmagano! Vaseegarano! :

வான்மகனோ! வசீகரனோ! தலைப்பைக் கூர்ந்து கவனித்தால் தெரிந்துவிடும் இது ஒரு ஃபேன்டஸி கதையென்று.

ஃபேன்டஸி என்னும் கற்பனையில், நிதர்சனம் என்னும் நிஜத்தையும் குழைத்து எழுதிய காதல் நிறைந்த சமூகக் கதை இது!

இது ஏன் இப்படி இருக்கு?

இங்க ஒண்ணுமே சரியில்ல!

ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க?

இது போன்ற கேள்விகளை நாம் அன்றாடம் வாயாலும், காதாலும் கேட்டிருப்போம்.

அப்படி நான் கேட்ட தருணத்தில் உதித்த கதை இது. கதையின் நாயகி தேனருவி, குறும்பும், பொறுப்பும் ஒரு சேர நிறைந்த எழுத்தாளர். அவளைச் சுற்றி நடக்கும் கதையில் வாசகனாக நாயகன் ஆரன் வந்து சேர்கிறான்.

கொஞ்சம் மக்கான ஆரனும், கொஞ்சம் கெத்தான அருவியும் சேர்ந்து கதைக்காக அவர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள், நிஜத்தில் இறந்து போவதைக் கண்டு குழம்பிப் போகிறார்கள். அவை எல்லாம் எதிர்பாராத நிகழ்வா? இல்லை திட்டமிட்ட சதியா? இதைக் கண்டறிவது நாயகியின் அண்ணன் போலீஸ் விக்ரம்.

ஒரு ஃபேண்டஸி கதைக்குள் எப்போதும் போல் என்னால் முடிந்தளவு சமூகக் கருத்தை வலியுறுத்தியுள்ளேன். படித்து பாருங்கள் நண்பர்களே!

Rent Now
Write A Review

Same Author Books