கோவில்பட்டியில் பிறந்த ஸ்.ஏ.கருப்பையா அவர்கள், அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழகத்தில் ஃபிராங்க் அவர்களுடன் சேர்ந்து எழுதியுள்ளார். 1991ம் ஆண்டு நடைபெற்ற அறிவொளி இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும், அது மக்கள் இயக்கமாக எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் ஃபிராங்க்.
ஃபிராங்க் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் ஊராட்சியில் உள்ள கோவில்பட்டியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தில், கிராமத்து மக்கள் இடையே நிலவி வரக்கூடிய கதைகள், வரலாற்றுச் செய்திகள், பாடல்கள், திருவிழா முறைகள் போன்றவற்றை பதிவு செய்துள்ளனர்.
Rent Now