படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையை தீர்மானிப்பதில்லை... அதைத் தாண்டியும் இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களில் திறமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். வராததைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை விட தன்னிடமுள்ள திறமையைக் கொண்டு முயன்று முன்னுக்கு வர வேண்டும்... மேகத்துள் வானமாய் ஒளிந்து கொண்டிருக்கும் முகிலனின் திறமையை அவனது மதி எப்படி வெளிக் கொண்டு வருகிறாள் என்பதே இந்தக் கதை... குடும்பம், உறவுகள், காதல், திறமை என முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்ட கதை.
நான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின் மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...
புத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...
Rent Now