“வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்…” சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எல்லாமே சுஜாதா எழுதியது போல பல்நோக்கு களங்களுடன் கூடிய வித்தியாசமான கதைகள்தாம். கிட்டத்தட்ட எல்லாக் கதைகளின் அடிநாதமும் ஒரு மர்மம் / ஒரு திகிலான சம்பவம் சார்ந்ததாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று நிச்சயம் வேறுபடும்.
அம்மாவும் ஏர்ஹோஸ்டஸ் பேயும் சிறுகதை நான் நேரில் (ஒரு விமானப் பயணத்தில்) பார்த்த சம்பவத்தின் அடைப்படையில் எழுதப்பட்டது.
எங்கெங்கு காணினும் சக்தியடா சிறுகதை என் நண்பன் ஒருவனின் அண்ணிக்கு நேர்ந்த நிகழ்வும், அந்த அண்ணி துணித்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்பதின் கற்பனையே.
நாமே நீயோ / நானோ அல்ல; நாமே நாம் சிறுகதை என் நண்பன் ஒருவனின் தங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியை ஒட்டிய கற்பனை உருவகமே.
கர்மா நின்று பேசும் சிறுகதை ஒருவித FLASH FICTION. சட்டென ஆரம்பித்து, சடுதியில் முடிந்துவிடும் இதுவும் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவான கற்பனையாக்கமே.
மற்ற சிறுகதைகளிலும் அவ்வாறே. ஆசான் சுஜாதா அவர்கள் காட்டிய வழியில் அனாவசியமான வார்த்தை வர்ணனைகள், விரிவான விவரிப்புகள் போன்றவை எதுவுமின்றி சுருக்கமாக அமைய முயற்சி செய்துள்ளேன்.
படித்து இன்புறுங்கள். படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்தவன். முதுகலை ஆங்கில இலக்கியம் படித்ததினால், ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பித்த ஈடுபாடு, தமிழில் தொடர்கிறது.
எழுத ஆரம்பித்தது மிகச் சமீபத்தில்தான். சிறுகதைகள் / கட்டுரைகள் எழுதுவதில் அதிக நாட்டம்.
எழுத்தாளர் சுஜாதா போல ஒரு பல்துறை எழுத்து விற்பனன் ஆக ஆசை.
தமிழில் சுஜாதா அவர்களும், ஆங்கிலத்தில் ஃபிரடரிக் ஃபார்ஸைத் (Frederick Forsyth) / ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) ஆகியோர் என்னுடைய ஆதர்ஸ எழுத்தாளர்கள்.
மனைவி / மகன் / மகள் என்று அளவான குடும்பம். வசிப்பது சென்னையில்.
மிகச் சிறிய வயது முதலே வாசிப்பில் பெரும் ஆர்வம். படித்துவிட்டு எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மின்னஞ்சல்: pustaka.rsdhar@gmail.com
Rent Now Srinivasan Ramamoorthy
அனைத்து கதைகளும் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்றவாறு சிறிதும் மாறாமல் உள்ளன என்பதில் ஐயமில்லை .தலைவர் சுஜாதா சொல்லி இருக்கின்ற சிறு கதை இலக்கணத்தின் படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் அருமையாக அமைந்து இருப்பதால் , படித்து முடித்த உடன் தலைவர் கதைகளை படித்து முடித்த பின் ஏற்படும் அதே உணர்வு ஏற்படுகிறது
Srinivasan Uppili
எக்ஸ்பிரஸ் வேகச் சிறுகதைகள். சரளமான நடை. ஒரு சிறுகதை open -ended ஆக, தனது வாசகர்கள் புத்திசாலிகள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறார். பிறிதொரு சிறுகதையில் நமது எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் கதை முடிகிறது. இன்னொரு சிறுகதை சற்றும் யூகிக்க முடியாத ஒரு தீவிரவாத சதி பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக படியுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன்.
Guru Rajan
என்னைப் பொறுத்த வரையில் எல்லாமே அட்டகாசமான கதைகள்தான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எழுதியுள்ளார் ராம் ஸ்ரீதர் என்றே சொல்வேன். சுமாரான கதை என்றால் அது 'எங்கெங்கு காணினும் சக்தியடா' மட்டுமே. மற்ற எல்லாமே அற்புதக் கதைகள். அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவிற்கு நல்ல சீடர்.
R.C. Natarajan
சுவாரசியமான கதைகள். சுஜாதாவின் நடையை காண முடிகிறது. அதே போல் பன்ச். ஏதோ காரணத்தால் என் iphoneல் மட்டுமே படிக்க முடிகிறது. iPadல் படிக்க முடியவில்லை.
BALA VASU
Good collection. I bought this book in Amazon. Best wishes for more such efforts.
PS Hariharan
Dear Ram Sridhar. Excellent Stories. I appreciate you fully. I am a SUJATHA SIR's P(VE)RIYAN. After reading your stories, I felt Sujatha Sir is revisiting. God Bless You and Keep writing. Best Wishes. P.S. Hariharan. Mumbai
Wilson Augustin
Good book. Interesting short stories. Enjoyed reading.
Gayathri Raghuraman
A-class collection with very different stories with variety. All the best, Mr. Ram Sridhar, keep writing.
Dhanalakshmi Ramamirtham
Simply very good collection. Very nice stories. Best wishes to the writer as it is first short story collection.
VELAVAN SELVAN
எல்லாமே அருமையான கதைகள். இது போல மேலும் சிறுகதைகளை / அருமையான நாவல்களை இந்த நூலாசிரியர் ராம் ஸ்ரீதர் எழுதி, நம் போன்றோர் வாசித்து மகிழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.