வச்ச குறி தப்பாது தொகுப்பில் உள்ள எனது சிறுகதைகள் வெவ்வேறு களம் கொண்டவை.
இன்னார்க்கு இன்னாரென்று என் பெங்களூரு நண்பர் ஒருவன் வாழ்வில் (கிட்டத்தட்ட) நடந்த சுவையான சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.
உலகம் யாவையும் - கொரோனா போன்ற கொடிய நுண்துமியின் (Virus) தாக்குதல் சோகமாகவாகவே முடியவேண்டுமா என்ன? எதையும் சவாலாக ஏற்றுக்குக்கொண்டு சந்திக்கும் இரு பெண்களின் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம்......எதையும் பாஸிட்டிவ்வாக சந்தியுங்கள் என வலியுறுத்தும் ஒரு கதை.
கத்திமுனை காயம் செய்யும் - ஒரு பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்வில் நிஜமாகவே நடந்த சில சம்பவங்கள், ஒரு இளம் தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரியின் பார்வையில்.....
கர்மா நின்று பேசும், நான் பார்த்ததிலே, நானே வருவேன், வரலாம் வா போன்றவை - Flash Fiction எனப்படும் புனைவு வகையில் என்னுடைய சில கற்பனை முயற்சிகள்....
ப்ரம்மாஸ்திரம் - Time Travel மூலம் கடந்த காலம் சென்று ஒரு குறிப்பிட்ட பிரபலத்தைச் சந்தித்து உரையாடுவது. நிச்சயம் சுவாரஸ்யமான விஞ்ஞானப் புதினமாக இருக்க நான் கியாரண்டி.
விபரீத முரண்: ஒரு விபரீத சுவையான கற்பனை என படிப்போரால் பாராட்டப்பட்ட வித்தியாசமான சிறுகதை.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வலம் தமிழ் இலக்கிய மாத இதழில் வந்தவை. ஒவ்வொன்றும் படிப்போரின் கவனத்தைக் கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்தவன். முதுகலை ஆங்கில இலக்கியம் படித்ததினால், ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பித்த ஈடுபாடு, தமிழில் தொடர்கிறது.
எழுத ஆரம்பித்தது மிகச் சமீபத்தில்தான். சிறுகதைகள் / கட்டுரைகள் எழுதுவதில் அதிக நாட்டம்.
எழுத்தாளர் சுஜாதா போல ஒரு பல்துறை எழுத்து விற்பனன் ஆக ஆசை.
தமிழில் சுஜாதா அவர்களும், ஆங்கிலத்தில் ஃபிரடரிக் ஃபார்ஸைத் (Frederick Forsyth) / ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) ஆகியோர் என்னுடைய ஆதர்ஸ எழுத்தாளர்கள்.
மனைவி / மகன் / மகள் என்று அளவான குடும்பம். வசிப்பது சென்னையில்.
மிகச் சிறிய வயது முதலே வாசிப்பில் பெரும் ஆர்வம். படித்துவிட்டு எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மின்னஞ்சல்: pustaka.rsdhar@gmail.com
Rent Now R C NATARAJAN
விறுவிறுப்பான கதைகள், கட்டுரைகள். பெங்களூர் கௌர் கதை... சூப்பர்.
Srinivasan Ramamoorthy
""வச்சக்குறி தப்பாது "" - ராம் ஸ்ரீதர் அவர்கள் எழுதி புஸ்தகாவில் வெளியிட்டு இருக்கும் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள், சுஜாதா அவர்களின் சிறுகதை இலக்கணத்தை ராம் ஸ்ரீதர் பின்பற்றுபவர் என்பது அவரின் முதல் சிறுகதை தொகுப்பான ""வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்"" சிறு கதைகளிலேயே நிரூபணம் ஆகிவிட்டது . அது இந்த தொகுப்பிலும் தொடர்கிறது .
GURU RAJAN
மிகவும் அருமையான தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையும் வித்தியாசமாக, மனத்தைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கின்றது. கட்டுரைகள் அட்டகாசம். அதுவும் குறிப்பாக மூன்று கட்டுரைகள்: சிக்கன் ஆட்டம், விஞ்ஞானப் புதினங்கள் பார்வையில் எதிர்காலம் மற்றும் வலையில் சிக்காத மாமத யானை. எவ்வளவு புதிய தகவல்கள் !! அவ்வளவும் சுவாரஸ்யம். ஒரு புத்தகத்திற்கும், இன்னொரு புத்தகத்திற்கும் இவ்வளவு இடைவெளி வேண்டாம் அன்பரே. நிறைய எழுதுங்கள். குறைந்தது மாதம் ஒரு புத்தகம் வெளிவருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், மேலும் வளர வாழ்த்துக்க