'வண்ணப் பூச்சூட வா... வெண்ணிலா...!' என்ற வித்தியாசமான நாவலின் கதாநாயகி வெண்ணிலா ஒரு அழகுப் பெட்டகம்! சந்தர்ப்ப சூழ்நிலையால் விபத்தில் சிக்கி தன் காலை இழக்கிறாள். ஊனத்தை காரணம் காட்டி உதாசீனம் செய்தவர்கள் முன் உத்வேகத்துடன் உழைத்து உயர்ந்து 'ஊனத்தையே ஊனமாக்கிக்' காட்டுகின்றாள் வெண்ணிலா.
'மனதில் அழுக்கும், கெட்ட எண்ணங்களுமே உண்மையான ஊனம்... தன்னம்பிக்கையும், வைராக்கியமும் மன தைரியமும் இருந்தால்... எந்த ஊனமும் ஊனமல்ல' என்று கூறி வெண்ணிலாவுக்கு தூண்டு கோலாக, நண்பனாக இருக்கும் சூரியா... உங்கள் நெஞ்சத்தைத் தொடப்போவது உறுதி!
உச்சக்கட்டத்தில்... ஒரு பக்கம் சூரியா, மறுபக்கம் மனம் திருந்தி வந்த அத்தான் திவாகர்! இருவரில் யாருக்கு மாலை சூட்டப் போகிறாள் வெண்ணிலா? படியுங்கள்...
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Rent Now