வரலஷ்மி என்ற கதாநாயகி..கல்யாணம் ஆகாத பெண்..கையில் குழந்தையுடன் வந்து, அதற்கு காரணம் அந்த ஹீரோதான் என பழி சுமத்த, கதையில் சூடு பிடிக்கிறது.அதன்பிறகு நடக்கும் விறுவிறுப்பான ஃபேமிலி த்ரில்லர்தான் இந்தக்கதை..
ஸ்ருதி பிரகாஷ். பள்ளிப்படிப்பு சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில். சத்யபாமா பல்கலை கழகத்தில் பி.டெக்..பயோ டெக்னாலஜி முடித்துள்ளார்.
முறையான சங்கீதம் பயின்றவர். மற்றும் வீணை வாசிக்கவும் தெரியும். எழுத வந்தது ஜூலை 2020 யில். இதுவரை, குமுதம், குங்குமம், கலைமகள், கல்கி, மங்கையர் மலர், சிநேகிதி போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதை வெளியாகி விட்டது.
தொடர்ந்து எல்லா நட்சத்திர பத்திரிகைகளிலும் கதைகள் கேட்கப்படுகிறது.
"வந்தாள் வரலஷ்மி" முதல் நாவல்.. புஸ்தகா அறிமுகப்படுத்துகிறது.
அப்பா பிரபல எழுத்தாளர் தேவிபாலா.
எழுத்துலக வாரிசு ஸ்ருதி பிரகாஷ் உருவாகி விட்டார்.
Rent Now Devibala
விறுவிறுப்பான நல்ல குடும்ப கதை எடுத்தால் படித்து முடித்த பிறகுதான் மற்றவேலைகள்.உடனே படிக்கவும்.