இரு வெவ்வேறு சூழ்நிலையில் விதியின் கட்டாயத்தில் வளர்பவர்கள், சந்தர்ப்ப வசத்தால் மீண்டும் சந்தித்தால்? .தாய், மகன், மகள் இவர்களை சுற்றி கதை படர்கிறது. இவர்களிடையே நடக்கும் பாசப் போராட்டம், மேலும் கொஞ்சம் காதல் கலந்த அழகான குடும்பக் கலவை.
இந்தியாவில், பாடகி சாரதா...ராமமூர்த்திக்கு பிறந்த வசந்துக்கும், அமெரிக்காவில் வசிக்கும் கமலா, விஸ்வநாதன் தம்பதியரின் புதல்வி பைரவிக்கும் உள்ள பந்தம் சங்கீதத்தில் அறிமுகமாகிறது.
அமெரிக்காவிலிருந்து தன் சகநண்பன் அஜய்யுடன் கர்னாடக சங்கீதம் கற்க என்று வரும் பைரவி, சாரதா குடும்பத்துள் கலந்து உறவாட,அழகான பாசப்பிணைப்பு அவர்களுக்குள் அங்கே மலர, அவள் வந்த உண்மையான நோக்கம் நிறைவேற அவள் கடந்து போகும் பாதை.....அதனால் விளையும் திடீர் திருப்பம், புயலாய் அந்த குடும்பத்தை அலைக்கழிக்க......அந்த போராட்டத்தில் சிக்கிய வசந்த், பைரவி, சாரதாவின் நிலை.மூடி மறைத்த கதை அங்கே வெளியேறி அனர்ததங்களை விளைவிக்கிறது.
ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.
சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.
இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்
எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.
Rent Now