இது ஒரு அல்ட்ரா மாடர்ன் க்ரைம் திரில்லர். கதையில் வரும் வர்ணனைகள் சாண்டியல்யனையும் தாண்டியவை. ஸ்டண்ட் மாஸ்டர் ஜெரோம் பேரழகி விந்தியாவை பாரில் சந்திக்கிறான். தான் சந்தித்த விந்தியா பில்லியனர் அழகன் பெருமாளுக்கு இரண்டாவது மனைவி என அறிகிறான். அழகன் பெருமாள் இயற்கைக்கு புறம்பான விதங்களில் செக்ஸ் அனுபவிப்பவன் என்கிற தகவல் கிடைக்கிறது. புதுபட பூஜைக்கு அழகன் பெருமாள் மனைவி விந்தியாவுடன் வந்து கலந்து கொள்கிறான். ப்யூட்டி பார்லரில் ஜெரோம் விந்தியாவை சந்திக்கிறான். யாருக்கும் தெரியாமல் ஆபத்தை நேசி என கூறி விலகுகிறாள். ஜெரோம் பெருமாள் வெளியூர் போன நேரத்தில் விந்தியாவை சந்தித்து காதலை கூறுகிறான். விந்தியாவின் நடவடிக்கைகளை ஆராய பெருமாள் டிடக்டிவ் உத்தமசோழனை அமர்த்தியிருக்கிறான். விந்தியாவுக்காக அழகன் பெருமாளை கொல்ல தயாராகிறான் ஜெரோம். பறக்கும் ஹெலிகாப்டரில் பெருமாளை கொன்றுவிட்டு தப்பிக்கிறான் ஜெரோம். ட்லிஸ்ட்.
விந்தியா உண்மையானவளா அல்லது பொய் சாகசகாரியா? நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.