Lakshmi Subramaniam
“நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்ள வேண்டும். வந்தபின் பரிகாரம் தேடுவதைவிட, வருமுன் காப்பது நல்லது. ஆரம்ப நிலையில் சிகிச்சை எப்போதும் எளிமையானது; பெரிதாகிவிட்டால் சிக்கலாகிவிடும்; சிகிச்சையும் கடினமானது! இவற்றை எல்லாம் டாக்டர்கள் பலரும் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு.”
அந்த அடிப்படையில் பொதுமக்களுக்குப் பயன்படக் கூடிய குறிப்புகளை, நிபுணர்களிடமிருந்து பெற்று, இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். மருத்துவ நிபுணர்களின் விலாசத்தையும் பயன்பெற விரும்புகிறவர்களுடைய கவனத்துக்காக அளித்துள்ளேன்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய, அன்றாட வாழ்க்கையில் ஆலோசனை பெறுவதற்குரிய, பயனுள்ள குறிப்புப் புத்தகமாக இது அமைந்துள்ளது. இந்த வசதியை வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.