மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல் அடிக்கும் போடிநாயக்கனூரில் பிறந்தவன் நான். எனவே, என் இயல்பிலையே மழையின் விருப்பம் புதைந்திருக்கிறது. வெள்ளக்காடு எனும் இந்த தொடர் கட்டுரை விகடன் இணையதளத்தில் 2015 ம் ஆண்டு பெருமழையின் நினைவாக வெளியானது. இந்த கட்டுரையை எழுத ஆர்வமூட்டிய அப்போதைய ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியரும், இப்போதைய கலைஞர் செய்திகள் தொலைகாட்சியின் செய்தி ஆசிரியராகவும் இருக்கும் திரு.திருமாவேலன், விகடன் இணையதளத்தின் பொறுப்பாளராக இருக்கும் திரு. கார்த்திகேயன் ஆகியோருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட சமயத்திலும், முழு வடிவிலும் பிழைத்திருத்தம் செய்து தந்த என் நண்பரும், ஜூனியர் விகடன் இதழின் உதவி ஆசிரியர் ஜெ.பிரகாஷ் அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
இந்த கட்டுரைகள் முழுவடிவம் பெறும் நேரத்தில், வங்காள விரிகுடாவில் தோன்றிய பானிப்புயல் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் பெரும்மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இயற்கை இப்போதைக்கு ஏமாற்றி விட்டாலும், எப்போதும் ஏமாற்றுவது அதன் இயல்பல்ல.
என்றும் அன்புடன், கே.உமாபதி எனும் கே.பாலசுப்பிரமணி
எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி, என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
Rent Now