Home / eBooks / Vetrikana Mugavari
Vetrikana Mugavari eBook Online

Vetrikana Mugavari (வெற்றிக்கான முகவரி)

About Vetrikana Mugavari :

அனைவருக்கும் வணக்கம். இன்றைய இளைஞர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் வெற்றி என்பது மிகவும் தேவையாகவே உள்ளது. ஆகவே வெற்றி பெறுவதற்குத் தகுந்த ஆக்கச் சிந்தனைகளும் துரிதமான செயல்பாடும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கான பயணம் சுலபமாக இருக்கும்.

அந்த நோக்கினை அடைய வேண்டுமானால் வழிமுறைகளையும் வழிகாட்டுதலையும் நல்ல ஆலோசனைகளையும் அன்பான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய "சண்முககவசம் திங்கள் இதழ் ஆசிரியர் திரு. கு.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், இந்நூலுக்கு ஊக்கம் தந்த அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப் பரியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும், மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

அன்புடன், மு.ப.நடராசன்.

About M.P.Natarajan :

மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books