சென்னையில் ஒரு பெரிய கம்பெனி நடத்தி வருகிறார் கதிரொளி. அதில் மணிமொழி வேலை பார்த்து வருகிறாள். தன் முதலாளி கதிரொளியின் ரகசியம் ஒன்றை அறிந்துக் கொள்கிறாள். அதன்பின் அவள் மர்மமான முறையில் இறந்துவிடுகிறாள். அந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க சங்கர்லால்-ஐ வரவழைக்கிறார்கள். அவள் எப்படி இறந்தாள்? அவள் அறிந்துக்கொண்ட முதலாளியின் ரகசியம் என்ன? அதை சங்கர்லால் விறுவிறுப்பாக எவ்வாறு துப்பறிகிறார் என்பதை தமிழ்வாணனின் நடையில் படியுங்கள்.
திரு.தமிழ்வாணன்-திருமதி மணிமேகலை தம்பதியின் புதல்வர் இவர். தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர். திருமணமாகி இரு மகன்கள். மனைவி பெயர் ஜெயம். மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். இவருடைய தலைமையில் செயல்படும் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவில் 84 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் துணையுடன் கடந்த 35 ஆண்டுகளாக ஆண்டு ஒன்றிற்குச் சராசரியாக 200 புத்தகங்கள் வீதம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் லேனா தமிழ்வாணன்.
இந்த ஆசிரியர் குழுவின் தலைவர் என்ற முறையில் இதுவரையில் 6500 புத்தகங்களுக்கு மேல் பதிப்பித்திருக்கிறார். 59 வயதில் இது ஒரு கின்னஸ் சாதனை. கடந்த 35 ஆண்டுகளில் இவர் பல்வேறு தலைப்புகளில் 70 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி விருதை 1992-1993இல் பெற்றிருக்கிறார்.
நன்கு உலகம் சுற்றியவர். தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று 1984இல் பாரிசுக்கும், லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்குச் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார். ஜப்பானுக்கும், ஆசியாவின் பல நாடுகளுக்கும் மே 1998இல் மேற்கொண்டார். ஷார்ஜா தமிழ்ச் சங்கம் மே 1992-லும், உகாண்டா தமிழ்ச் சங்கம் 2012 லும் இவரை அழைத்துக் கௌரவித்தன.
இவரது வாழ்வு முன்னேற்ற நூலான ‘ஒருபக்கக் கட்டுரை - பாகம் 12' சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசைப் பெற்றது. பரிசுத் தொகை ரூ. 3,000 தமிழக நிதியமைச்சரால் வழங்கப்பட்டது.
இவருடைய படைப்புகளை நான்கு மாணவர்கள் ஆராய்ச்சி செய்து எம்ஃபில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். மூவர் பி.எச்.டி.. பட்டம் பெற்றுள்ளனர். மேலும் ஒருவர் பி.எச்.டி ஆய்வினை மேற்கொண்டுள்ளார். ஒருவர் எம்.பில் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களான டி.வி.எஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு நேர நிர்வாகப் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்.
2003 ஆம் ஆண்டு குவைத்தின் புகழ்மிக்க அமைப்பான பிரண்ட் லைனர்ஸ், இவரை அழைத்துக் கௌரவித்தது. இப் பயணத்தின்போது இசைஞானி இளையராஜாவுடன் பயணிக்கவும், நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறார். மே,2003இல் என்.எஸ்.என்.ஏ என்ற அமெரிக்கச் சமூக அமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் அமெரிக்கா சென்றார். இச் சங்கத்தின் மாநாட்டில் தலைமை விருந்தினர் என்ற கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்ப்பதே கடினம். ஆனால் ரஜினியோ இவரை வீடு தேடி வந்து சந்தித்து, இவரது மகன் அரசுவின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையை விளக்கி, மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஒலிம்பிக் கார்ட்ஸ் லிம்ட்டட் எனப்படும் அழைப்பிதழ்களின் தாயகத்தில் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக இயக்குநராக உள்ளார்.
Rent Now