Home / eBooks / Vinnil Suzhalum Vinthaigal
Vinnil Suzhalum Vinthaigal eBook Online

Vinnil Suzhalum Vinthaigal (விண்ணில் சுழலும் விந்தைகள்)

About Vinnil Suzhalum Vinthaigal :

சிறுவர்களுக்கும் புரியும் விதமாக விண்வெளியின் அதிசயங்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். 'விண்ணில் சுழலும் விந்தைகள்' என்கிற இந்தச் சிறுநூல் உருவானது.

இப்போதைய குழந்தைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிற அளவு சூழ்நிலை இருக்கிறது. தொலைக்காட்சியில் 'டிஸ்கவரி', 'நேஷனல் ஜியாக்ரஃபிக்' அலைவரிசைகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிற குழந்தைகளை நான் அறிவேன்.

அவர்களுக்காகவும், அவர்களைப் போல் மற்ற துறுதுறுப்பான குழந்தைகளுக்காகவும் நிறையப் படங்களோடு இந்த நூல் உருவாகியுள்ளது. பெரும் அளவில் அமெரிக்க ‘நாஸா' விண்வெளிக் கலங்கள் எடுத்த படங்களும், அவர்கள் அனுப்புகிற புதிது புதிதான செய்திகளும் இந்த நூலில் பயன்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பு என் நன்றிக்கு உரியது.

மிக்க அன்புடன்
சுப்ர.பாலன்

About Subra Balan :

திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.

விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.

Rent Now
Write A Review

Same Author Books