Home / eBooks / Vithanathu Chithiram
Vithanathu Chithiram eBook Online

Vithanathu Chithiram (விதானத்துச் சித்திரம்)

About Vithanathu Chithiram :

கவிதையும் இசையும் ஒரு சேர உருவான இவ்வுலகில், கவிதைகளின் தொகுப்பும், கவிஞரின் சிந்தனைச் சாரலையும் ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாய் இருக்கிறது, இந்த விதானத்து சித்திரம் என்ற நூல். விதானத்து சித்திரத்தில் உள்ள சிற்பங்கள் எவ்வாறு சிற்பியை பெருமைப்படுத்துகிறதோ, அதேபோல் இந்நூலின் ஒவ்வொரு நுணுக்கங்களும் எழுத்தாளரை பெருமைப்படுத்துகிறது என்பதை வாருங்கள்.... வாசித்து தெரிந்து கொள்ளலாம்..

About Ravisubramaniyan :

கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், இசைக் கலைஞர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன்.

ஆறு கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என எட்டு நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

இவரின் கவிதைகளில் சில ஒன்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவரது தேர்தெடுத்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

இந்திராபார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், டி. என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இவர் இயக்கி உள்ளார். கவிஞர். திருலோக சீதாராம் நூற்றண்டு நினைவாக அவரது ”உடையவர்” என்ற தலைப்பிலான கவிதையின் அடிப்படையில் ஒடிசி நடனக்கலைஞர் சுப்ரிதா திருலோக் நடனமாடிய கவிதை நாட்டிய நாடகத்தை இயக்கி பதிவு செய்துள்ளார்.

விஜய், ஜெயா போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிய இவர் அந்த நிறுவனங்களுக்காக பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது மறைந்த திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் பற்றிய ஆவணப்படத்தை கவிதாலயா நிறுவனத்துக்காக இயக்கி வருகிறார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் நாடகக் கலைஞராகப் பங்காற்றி வருகிறார். தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம், தமிழ் திரைப்பட டப்பிங் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராக உள்ள இவர் 2017இல் வெளியான ’டு லெட்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

சாகித்திய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக (2003 முதல் 2007 வரை) பணியாற்றி உள்ள இவர், நவீன கவிஞர்கள் பலரது கவிதைகளை மெட்டமைத்து இலக்கிய மேடைகளில் பாடி வருகிறார். சில இலக்கிய விருதுகள் வழங்கும் அமைப்புகளில் நடுவராகவும் உள்ளார்.

மத்திய அரசின் 65வது தேசிய திரைப்பட விருதுகளின் தேர்வுக்குழு (2017) நடுவராகவும்பணியாற்றியுள்ளார். தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு இலக்கிய ஆளுமையாக பணியாற்றி வருகிறார்.

தமிழகஅரசு பரிசு, திருப்பூர் தமிழ்சங்க விருது, நீயூஜெர்சி தமிழ்சங்க விருது, சிற்பி இலக்கிய விருது, தி.க.சி. இயற்றமிழ் விருது, மா. அரங்கநாதன் வாழ்நாள் சாதனை இலக்கிய விருது, தஞ்சைப் பிரகாஷ் கவிதை விருது, ஆனந்தாஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் கலை இலக்கியவிருது போன்ற விருதுகளை தனது இலக்கிய பணிகளுக்காக இதுவரை பெற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books