R. Manimala
ரேகா, அரவிந்தன் இருவருக்கிடையே சிறு வயதில் ஏற்பட்ட மனகசப்புகள், நாளடைவில் பெரிய பகையாக மாறி, இருவர் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது. இருவரும் வாழ்வில் சாதிக்க நினைத்து தன் குறிக்கோளை வென்று பிறகு, தாம் யார் என்று தெரியாமல் சிறு வயதில் ஏற்பட்ட பகையை மறந்து மணவாழ்வில் இணைந்தார்களா? அன்பினால் சிங்கத்தின் மீசையைக்கூட பிடுங்க முடியும் அதுபோல அன்பால் இவர்கள் தன் பகையை வென்றார்களா? வாசிக்கலாம்… மணிமாலாவின் எழுத்துச்சாரலில்…
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.