வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!
சமூகம் சரித்திரம் அமானுஷ்யம் என்று எல்லா தளங்களிலும் இன்று நான் அறியப்பட்டிருந்தாலும் அமானுஷ்யம் கலந்த மர்மமான கதைகள் என்றால் என் பெயர் முதலில் அடிபடுவதைக் காணுகிறேன். வழக்கம் போலவே ஒவ்வொரு அத்தியாயமும் தொடர்கதைகளுக்கே உரிய பரபரப்புடன் அமைந்தது. இதன் முக்கிய கருப்பொருளாக நாக மாணிக்ககல் அமைந்தது. வாசகர்களும் விரும்பி வரவேற்றனர். கதை போகும் போக்கை வைத்து பலரும் இதை அமானுஷ்ய நாவலாகவே கருதினர். ஆனால் இதன் க்ளைமாக்ஸ் அதை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
இப்படி ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிற ரீதியில் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் இது செயற்கையான முடிவல்ல - மிக அருமையான நம்பகமான முடிவே என்றனர்.
மர்மக்கதைகளுக்கு இலக்கணமே அதன் முடிவு அமைவதில்தான் உள்ளது. மர்மக் கதைகள் எழுதும்போது நான் அதில் பல பரிசோதனைகளை செய்து பார்த்துள்ளேன். ஆனந்தவிகடனில் கோட்டைப்புரத்து வீடு என்கிற தொடரினை எழுதியபோது அத்தொடரின் கடைசிவரி வரை சஸ்பென்ஸை கொண்டு சென்றேன். அது மிகப் பெரிய வெற்றிபெற்றது. இத்தொடரிலும் அது போல ஒருவர் சோதனை செய்ததில் நல்ல வெற்றி கிட்டியது.
- இந்திரா சௌந்தர்ராஜன்
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Rent Now