தயாகரன்-ப்ரீதா..!
உறவுமுறையிலே இவர்கள் நேசத்தால் பிணைக்கப்பட்டவர்கள். பிறகு காதலுக்குச் சொல்லவா வேண்டும்.
அவள் விரல்களின் மருதாணிப் பூச்சு அவன் அணிந்திருக்கும் சட்டையில்..!
தன் உயிரில் வைத்து நேசித்தவளை திடீரென இழக்கிறான் தயாகரன். சற்றும் எதிர்பாராத நிகழ்வு. தாங்கமுடியாத இழப்பு.
இப்படிப்பட்ட நேரத்தில் வான்மதி அவனுடையை வாழ்க்கையில் நுழைய நேரிடுகிறது.
வான்மதி யார்? தயாகரனால் வான்மதியை ஏற்றுக்கொள்ள முடிந்ததா?
வெறும் காதலை மட்டுமே எழுத்துக்களில் கொடுத்தால் திகட்டிவிடும். சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளை ஆங்காங்கு கதையின் வாயிலாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பே புத்தகமாக வெளிவந்த இந்த நாவலுக்கு எனது ரசிகர்களிடையே அமோக ஆதரவு. நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். Always welcome.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now