காலங்களில் பல உண்டு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், குளிர் காலம், வசந்த காலம். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல காலம்.
நடப்புக் காலத்தை யாஹூ காலம் என்றும் குறிப்பிடலாம்.
எலிசபெத் டெய்லரின் எட்டாவது கணவர் யார்? வால்டர் ஸ்காட்டின் லாகின்வர் கவிதையில் வரும் நதியின் பெயர் என்ன? பெண் கொசுக்கள் வெடுக்கென்று பிடுங்க கடவுள் அளித்த உறுப்பு யாது? இரண்டாவது மனைவிக்குத் தாலி முடிந்தால் இ.பி.கோ.வின் எந்தப் பிரிவில் புழல் சிறைக்குக் குடிபுக வேண்டி வரும்? சிம்பன்ஸியின் முதுகுத் தண்டின் கடைசி எலும்பின் பெயர் என்ன? எல்லாவற்றுக்கும், கணிப்பொறியின் வயிற்று அருகில் நகரும் மூஞ்சூறை அழுத்தினால் விடைகள் தரும் யாஹூகாலம் ஒரு பொற்காலம்.
- ஜே.எஸ்.ராகவன்
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.
வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..
Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.
தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'
Rent Now PS Hariharan
Dear Raghavan Sir, I have read almost all of your books in PUSTAKA and I am proud to say that I am extremely delighted to read your books. They are so AMAZING and your writing style is reminding me of Bakkiyam Ramaswamy and Devan. Hats off Raghavan SIr and Best Wishes. Hariharan Mumbai
PS Hariharan
Dear Raghavan Sir, I have read almost all of your books in PUSTAKA and I am proud to say that I am extremely delighted to read your books. They are so AMAZING and your writing style is reminding me of Bakkiyam Ramaswamy and Devan. Hats off Raghavan SIr and Best Wishes. Hariharan Mumbai