பயணங்கள் எப்போதுமே இனிமையானவை. உற்சாகம் தருபவை. அதுவும் ஆன்மிகம் சார்ந்தவையாக இருப்பின் அதன் சிறப்பே அலாதியானது.
இதற்கு முன்பே என்னுடைய திருத்தலப் பயணங்கள் பற்றிய கட்டுரைகளை நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்தாவதாக மலரும் 'யாதுமாகி நின்றாள்!' என்னும் இத்தொகுதி வெளிவருகிறது.
தமிழகம், ஆந்திரம், இன்றைய தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், தவிர மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.
வழக்கம்போல் இந்த நூலையும் வாசக அன்பர்கள் வரவேற்று மகிழ வேண்டும். இந்தக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்ட கல்கி, அமுதசுரபி, தீபம், தினமணி, கோபுர தரிசனம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்களுக்கு என் நன்றி.
அழகுற ஒளியச்சுச் செய்துள்ள நாஞ்சில் பெ. மணிக்கும் மேலட்டையை வடிவமைத்துள்ள ஓவியர் ஹரீஷ்குகனுக்கும் என் நன்றி.
அன்பன்.
சுப்ர. பாலன்
திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.
விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.
Rent Now