தைரியமான கிராமத்து இளம்பெண் பூங்குருவியின்... நெகிழ்வான காதல் கதை இது. கல்லூரியில் படிக்கும் தன் காதலன் முத்துக் காளையின் உயிரைக் காப்பாற்ற... தன்னை பழிவாங்கத் துடிக்கும் சூரியபூபதிக்கு கழுத்தை நீட்டுகிறாள். சூரியபூபதி தன் நண்பர்களோடு சேர்ந்து பூங்குருவியின் வாழ்க்கையை சீரழிக்க திட்டமிடுகிறான்.
பூங்குருவி மானாய் பயந்து ஓடினாளா? பெண்புலியாக சீறினாளா...?
பூங்குருவியின் அதிரடி முடிவே இந்நாவல். காதலன் முத்துக்காளை உயிர்பிழைத்து வந்தானா? சூரியபூபதியின் சதியிலிருந்து பூங்குருவி தப்பினாளா? “ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி” நாவல் ஒரு புதுமைப் படைப்பு. இம்மண்ணிற்கு பூங்குருவி போன்ற உத்தமமான, தைரியமானப் பெண்களால் தான் பெருமை.
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்