Vyjayanthi
About the Narrator
கல்லூரி நாட்கள் முதற்கொண்டே மேடைப்பாடகி. தனக்கென்று ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார். கவிதைகள் எழுதிப் பிரபலப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
ஆரம்ப நாட்கள் முதலே பேச்சுப்போட்டி.. கவிதைப் போட்டி.. பாட்டுப்போட்டி போன்றவற்றில் தொடர்ந்து பரிசுகள் வாங்கி, கம்பன் கழகத்திலும் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
இவர் எழுதிய பாடல்கள் பல இசையமைக்கப்பட்டு ஆல்பங்களாக வெளிவந்திருக்கின்றன.
பிரபல மெல்லிசைப் பாடல்கள் பாடுவதற்கும், போட்டிகளுக்கு நடுவராகவும் தொலைக்காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.
பாரதி பாசறையில் முழு ஈடுபாடுள்ள கவிதாயினியும்கூட.
கணவரும் மகனும் இதே இசைத்துறையில் இருப்பது மகிழ்ச்சி. இசை நடனம் போன்றவற்றில் தேர்ந்திருக்கும் மகன் ஒரு sound engnieer என்பது கூடுதல் பெருமிதம்.
கதைகளை ஆடியோவாகக் கொடுக்கும் இவர் எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய எழுத்தாளர்களின் மிகப் பிரபலமான கதைகளை வாசிக்க நேர்ந்தது கொடுப்பினை என்கிறார். குரல் வழியே கதை சொல்வது மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கும் செயல் என்கிறார். காரணம். இவரே ஒருசிறுகதை எழுத்தாளர்.
அனிமேஷன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். ஒரே திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு வயதினருக்குக் குரல் கொடுத்த அனுபவமும் உண்டு.
புஸ்தகா நிறுவனத்தின் நூல்களை வாசித்தது பெருமிதம் அளிக்கிறது என்கிறார்.